புதுக்கோட்டை, நவ.27- புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நூலக ஆணைக் குழு இணைந்து மாவட்ட அள வில் பள்ளி மாணவர்களுக் கான “இளம் படைப்பாளர் விருது” போட்டிகள் நடை பெற்றன. மாவட்ட நூலக அலுவ லர் அ.பொ.சிவகுமார் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்டத் தலைவர் மற்றும் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி முன் னிலை வகித்தார். மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர் கள் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான முடிவு கள் அறிவிக்கப்பட்டன. “இளம் படைப்பாளர் விருது” பின்னர் நூலக வார விழா நிறைவு நாள் விழாவில் வழங்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராஜ்குமார் டாக்டர் விஜி குமார், பேச்சாளர் பாலாஜி, யோகா பாண்டியன், சுவாமி நாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர்கள் சு.பீர் முகமது. சுரேஷ்மான்யா, மு.கீதா, கஸ்தூரி ரங்கன், குழிபிறை கஸ்தூரிநாதன், துரைக்குமரன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.