tamilnadu

img

ஊராட்சிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியக்குழுவின் முரண்பாடுகளைக் களைந்திடுக

நாமக்கல், ஜூன் 17- கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் டேங்க் ஆப்பரேட்டர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடு களைக் களைய வேண்டும் என வலியுறுத்தி  நாமக்கல்லில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் டேங்க் ஆப்பரேட்டர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடு களைக் களைய வேண்டும். 2017 அக்டோபர் முதல் வழங்க வேண் டிய நிலுவைத் தொகைகளை அனைத்து ஊராட்சிகளும் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்க ளுக்கு மாத ஊதியம் முறையாக ஊராட்சி மூலம் வழங்க வேண் டும். டேங்க் ஆப்பரேட்டர், துப்புரவு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம்  ரூ.2000 மற்றும் பணிக்கொடை  ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். 2000 ஆவது ஆண்டுக்குப் பின் பணியமர்த்தப்பட்ட டேங்க் ஆப்பரேட்டர்களை நிரந்தரமாக்கி முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திங்களன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கம் சார்பில் மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்க மாவட்ட செயலாளர் வீ.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் துவக்கி வைத்து பேசி னார். சிஐடியு மாவட்ட செயலா ளர் ந.வேலுசாமி கோரிக்கை களை விளக்கி பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் கு.சிவராஜ், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் பி.செங்கோடன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க  மாவட்டத் தலைவர் எம்.ஜீ.ராஜ கோபால், நிர்வாகிகள் ஆர்.தங்க வேல், ஸ்டீபன், மயில்வாகனம், ரேவதி, செல்லம்மாள், செல்வ குமரேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.