நாகப்பட்டினம்: நாகப்பட்டினம்- ஒரத்தூரில், ரூ.367 கோடி மதிப்பீட்டில் அமைய விருக்கும் தமிழக அரசின் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் துவக்கிவைத்து, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் விழாவிற்கு வரவியலாத நிலையில் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது ஒலிபரப்பப்பட்டது. தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மக்கள் நலவாழ்வு மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஸ் மற்றும் அரசின் உயர் அலுவலர் fள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசின் சாதனைகளைக் குறிப்பிட்டு உரையாற்றியபோது, “மயிலாடுதுறையைத் தலைமையாகக் கொண்டு புதிய மாவட்ட மாக்க வேண்டும் என்று, அந்தமக்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வருகிறார் fள். ‘அம்மா’ ஆட்சிக் காலத்திலும் இதனை நாங்களும் வலியுறுத்தி வந்துள்ளோம். தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாகும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.