tamilnadu

தூத்துக்குடி முக்கிய செய்திகள்

இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி, ஏப்.21-ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஞாயிறன்று (ஏப்.22) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்காக,வேட்பு மனுக்கள் பெறக்கூடிய ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்துமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனியன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உடனிருந்தார்.வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் அளிக்கும்பிரமான பத்திரத்தின் தகவலின் படி அனைத்து விதமான சான்றிதழ்களையும் அன்றைய தினமே பெற வேண்டும் என தேர்தல்நடத்தும் அலுவலரான சுகுமாரிடம் ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின்போது, கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, மணியாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் சிவலிங்க சேகர் ஆகியோர்உடனிருந்தனர்.


தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

தூத்துக்குடி, ஏப்.21-ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்பரிதாபமாக இறந்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் மூர்த்தி (17).தற்போது பிளஸ் 2 முடித்திருந்தார். இவர் கடந்த 18ஆம் தேதிகுடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 26 பேர் சேர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளார். இந்நிலையில் சனியன்று காலையில் ஆத்தூர்தாமிரவருணிஆற்றில் பாதயாத்திரை குழுவினர் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த மூர்த்திதிடீரென மாயமானாராம்.இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் 4 மணி நேரம் தேடியதில்,மூர்த்தி ஆற்றுக்குள் இருந்த முள்புதர்களில் சிக்கி உயிரிழந்ததுதெரிய வந்தது. பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

;