tamilnadu

img

தூத்துக்குடியில் துப்பாக்கிகளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி கடலோரப் படையின் ரோந்து பணியின் போது  இலங்கை எல்லை அருகே 30 டன் ஹெராயின்,10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல்  செய்யப்பட்டது. படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே, இந்திய - இலங்கை கடலோர எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய எல்லையில் படகு ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த படகை சோதனை செய்தனர். அதில், படகில்இருந்து 30 டன் ஹெராயின், கிறிஸ்டல் மேத்தலின்  போதை பொருள், 10 துப்பாக்கிகள் பறிமுதல்செய்தனர். படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்பட்ட நிலையில் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

;