tamilnadu

img

ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள்.... சாலை, வடிகால் வசதி கோரி சிபிஎம் போராட்டம்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 2015-ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்னர்ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப் படும் பி அன்டு டி காலனி, ராஜீவ் நகர்,அன்னை தெரசா, நகர், பால்பாண்டி நகர்,கதிர்வேல் நகர், பாக்கியலெட்சுமிநகர், கோக்கூர், பாரதிநகர், நிக்லேசன் நகர்உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதிசெய்து கொடுக்க வேண்டும், மழையால்சேதம் அடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், மழையால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலி
யுறுத்தி தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், துறைமுக செயலாளர் காசி,இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மாதர் சங்கம் கமலம், வாலிபர் சங்கம் ஜேம்ஸ், காஸ்ட்ரோ, பாலா, பாண்டி நாகராஜன், மாணவர் சங்கம் சுயம்பு செபஸ்தியான், சுதா, ராஜகுமாரி, முருகேசன், பொன்ராஜ், செல்வி, ரூபா, மினி, மாரியம்மாள். ராணி தர்மராஜ், பாலவிநாயகம், சுப்பையா, மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;