tamilnadu

img

அனைத்து தொழிற்சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, டிச.29- மத்திய-மாநில அரசு களின் தொழிலாளி மற்றும்  மக்கள் விரோத கொள்கை களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பெரு ந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் பேருந்து  நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி கதிர்வேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல் சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, உப்பு தொழி லாளர் சங்க மாவட்டத் தலை வர் பொன்ராஜ், ஏஐடியுசி மா வட்டத் தலைவர் மணி ஆச்சாரி, மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணன், எல்பிஎஃப் சார்பில் குழந்தைவேலு, முருகன் ஏஐடியுசி சி.சிவ ராமன், ஹெச்மெஸ் சார்பில்  சத்யா உள்ளிட்ட தொழிற்ச ங்கத்தினர் கலந்து கொண்ட னர்.