tamilnadu

img

வளைய சூரிய கிரகண விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடவாசல், டிச.26- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விஞ்ஞான் பிரசார், இந்திய வானவியல் நிறுவனம், அறிவியல் பலகை, கணித அறிவியல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு  அறிவியல் தொழில் நுட்ப மையம் ஆகி யன இணைந்து டிசம்பர் 26 அன்று வானில் நிகழவுள்ள அபூர்வ வளைய சூரிய கிரகணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  நடத்தியன. பள்ளி தாளாளர் நீலன்.அசோகன் தலைமை வகித்தார். கிரகணத்தை பாது காப்பாக பார்த்திட 900 மாணவர்களுக்கு சூரிய கண்ணாடிகள் வழங்கப்பட்டன. சூரிய கிரகணம் குறித்து மாவட்ட செய லாளரும், கருத்தாளருமான யு.எஸ்.பொன்முடி செயல்முறை விளக்கம் அளித்தார்.  மேலும் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார் குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளிலும், கிராமங்களிலும் வளைய சூரிய கிரகண விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.