திருவாரூர், ஜூன் 24- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் 33-விஸ்வநாதபுரத்தில் வசித்து வருபவர் காலம் சென்ற சின்னப்பன் மனைவி வசந்தா (52). இவர் பட்டியலி னத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி. இவ ருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அரசின் சார்பில் இல வச பசு மாடு வழங்கப்பட் டது. பிறகு ஒரு சில மாதங்கள் கடந்து சினையாக இருந்த பசு இறந்தது. இறந்த பசுவினை கால் நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்து அதன் சான்றி தழ் வழங்கினார். கிராம நிர் வாக அலுவலரும் உரிய சான்றிதழ்களை அளித்தார். மேலும் கால்நடை மருத்து வர் இறந்த பசுவின் மதிப்பு 30 ஆயிரம் ரூபாய் என்று ஓரி யண்டல் இன்சூரன்ஸ் கம்பெ னிக்கு பரிந்துரை செய்தார். இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கப் பெற்றால் தான் வேறு ஒரு பசு மாட்டை வாங்க முடியும் என்ற சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்நடைத் துறை அலுவலகத்திற்கும், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் நடையாய் நடக்கிறார் விவசாய கூலித் தொழிலாளியான சி.வசந்தா. வசந்தாவைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரி கிறது. இத்திட்டத்தில் உள்ள குளறுபடி காரணமாக இது போல் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன் சூரன்ஸ் திட்டத்தில் முறை கேடு நடக்கிறது என்று புகார்க ளும் எழுந்துள்ளன. இது குறித்து ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.