tamilnadu

img

ஆந்திரா அம்மம்பள்ளி அணையில் நீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றில் வெல்ல அபாயம் 

ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெல்ல அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

வங்கக்கடலில் உருவான புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்துள்ளது. புயலால் குறைந்த அளவிலான தேசங்களே ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே. அதே நேரத்தில், அதிக அளவிலான மழையை பொழிந்துள்ளது. நிவர் புயலின் தாக்கத்தால் ஆந்திராவிலும் மழை பொழிவு அதிகமாக இருந்துள்ளது. இதனால், ஆந்திராவின் அம்மம்பள்ளி அணையில் இருந்து தற்போது வினாடிக்கு ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால், ஆற்றின் கரையோரப் பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.