திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

திருவண்ணாமலை, மார்ச்.8- திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் தானிப்பாடி காவல்துறையி னர் ரோந்து செல்லும் போது அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (எ) அலெக்சாண்டர் (35), அந்தோணிசாமி (24) ஆகிய இருவரையும் கைது செய்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;