tamilnadu

img

உதவித் தொகை, குடிமனைப்பட்டா கேட்டு மனு

திருவண்ணாமலை, மார்ச் 18 - போளூர் தாலுக்காவைச் சேர்ந்த கிராம மக்கள் உதவித் தொகை மற்றும் குடி மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியரி டம் கோரிக்கை மனு அளித்த னர்.  திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலு காவைச் சேர்ந்த ஏரிக்குப் பம், சந்தவாசல், பட வேடு, வசூர், சனிக்கவாடி, அத்திமூர், வடமாதிமங்கலம், கருங்காலிக்குப்பம்,  எடப்பிறை, துரிஞ்சிகுப்பம், வாழியூர், களம்பூர், காக் கிரானந்தல் மற்றும் இலுப்பகுணம் ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த  200க்கும் மேற்பட்டோர் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ள னர். அதேபோல் குடிமனைப் பட்டா, வீட்டுமனைப்பட்டா கேட்டும் பலர் மனு அளித்துள் ளனர். ஆனால் இவர்கள் மனு மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாமல் உள்ளது.  எனவே மனு அளித்துள்ள அனைவரும் உதவித் தொகை, பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போளூர் வட்டாட்சியர் ஜெயவேலு விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினார்.  இந்நிகழ்வில் போளூர் தாலுகா செயலாளர் ஆர்.சிவாஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர். ப.செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.