tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

தமிழில் பிழையின்றி எழுத, உச்சரிக்க திருப்பூரில் இன்று சிறப்புப் பயிற்சி

 திருப்பூர், ஜூன் 22 - தமிழ் மொழியில் பிழையின்றி எழுத, உச்சரிக்க திருப்பூரில் இன்று (ஜூன் 23) பள்ளி மாணாக்கர்களுக்குச் சிறப்புப் பயிற்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஒருங்கி ணைப்பாளர் யோகி செந்தில் அளித்துள்ள செய்திக்குறிப்பு: 5ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு திருப்பூர் குமரன் சாலை அரிமா சங்கக் கட்டிடத்தில் காலை  10 மணி முதல் மாலை 4.15 மணி வரை சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி பங் கேற்று பயிற்சி அளிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு
உடுமலை, ஜுன் 22- உடுமலையில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை ப் பாராட்டி விருது வழங் கப்பட்டது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூல கத்தில் நூலக வாசகர் வட்டம் மற்றும் உடுமலை வர லாற்று ஆய்வுநடுவம், கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்து. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தா ளர் குமாரராசா தலைமை வகித்தார். நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார், அருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு இளையோருக்கான வளைகோல் விளையாட்டு அணியில் இடம்பெற்ற அரசுப்பள்ளி மாணவர் சுபாஸ் மற்றும் 10, 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் தமிழ், சமூகவியல் ஆகிய பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை கம்பளவிருட்சம் அறக்கட்டளை யின் துணைச் செயலாளர்கள் கார்த்திக்குமார், மனோகரன் ஆகியோர் வழங்கினர்.  இதைத்தொடர்ந்து உடுமலை மூத்த செய்தியாளர் பழனியப்பன் எழுதிய கண்ணகி அந்தாதி என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் குறித்து முனைவர் மஞ் சுளாதேவி, வழக்கறிஞர் சத்தியவாணி ஆகியோர் மதிப் புரை வழங்கினர். இதன்பின் கல்வெட்டுகளில் தென் கொங்கு நாடு என்ற தலைப்பில் முனைவர் மதியழகன், முனைவர் செயசிங் மற்றும் கல்வெட்டு கள ஆய்வாளர் தென்கொங்கு சதாசிவம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

சேலம் கோட்ட 11 ரயில் நிலையங்களில் உடல் எடை காணும் இயந்திரம் நிறுவ முடிவு

திருப்பூர், ஜூன் 22 - சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 11 ரயில் நிலையங்களில் இலவசமாக உடல் எடை காணும் இயந் திரங்களை நிறுவ ரயில்வே கோட்ட நிர்வாகம் முடிவு செய் துள்ளது. கடந்த வியாழனன்று சேலம் ரயில் நிலையத்தில் கட்டண மில்லா சேவையாக உடல் எடை காணும் இயந்திரத்தை ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தொடங்கி வைத் தார். இந்த கருவியின் மூலம் ஒருவர் உடல் எடையை அறிந்து கொள்வதுடன் அவரது வயதுக்கு இருக்க வேண்டிய எடையளவு, உணவு பழக்கம், பருமன், எடை குறைவு அளவு போன்ற விபரங்களைக் காணலாம். இதற்கு கட் டணம் செலுத்தத் தேவை யில்லை. மாறாக அந்த இயந்திரத்தில் ஏறி நின்று தனது 10 இலக்க அலைபேசி எண்ணைப் பதிவு செய்தால், அந்த  எண்ணுக்கு மேற்படி விப ரங்கள் குறுஞ்செய்தியாக வந்துவிடும். மறுமுறை வேறொரு இடத்தில் அதே அலைபேசி எண்ணைக் கொண்டு எடை பார்த்தால் அப்போதைய எடை முந்தை எடை ஒப்பீட்டு அளவு உள் ளிட்ட விபரங்களும் குறுஞ் செய்தியாகக் கிடைக்கும். அத்துடன் இந்த இயந் திரத்தில் வானிலை, ரயில்வே பாதுகாப்பு உள் ளிட்ட இதர விபரங்களும் கிடைக்கும். இந்த கோட் டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, உதகமண்டலம், மேட்டுப்பாளையம், குன் னூர், போத்தனூர், நாமக்கல், சேலம் நகரம்  உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் உடல் எடை காணும் இயந்திரங்களை நிறுவவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;