tamilnadu

திருப்பூர், ஈரோடு முக்கிய செய்திகள்

திருப்பூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், செப்.5- திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெறுகிறது.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளியன்று (செப்.6) காலை 10.30 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இம்முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து  கொள்ளலாம். முகாமில் பங்கேற்கும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்துகொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவையும் செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் பயணத்திற்கு நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
திருப்பூர், செப்.5- தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெரு சலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்குரூ.20 ஆயிரம் மட்டும் நிதி  உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும் பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் இதில் 50 கன்னி யாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனிதபயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப் பட்டுள்ளது. இப்புனித பயணம், இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி,  கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மததொடர் புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.  இப்புனித பயணம் அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற் கான விண்ணப்பப்படிவம் திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இத்திட்டத் திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புனித பயணம் செய்ய விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளு டன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருச லேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு ஆணை யர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம்,  சென்னை-600 005 என்ற முகவரிக்கு 30.09.2019க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல்  வேண்டும். மேலும் விபரங்களுக்கு திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்திலும், சிறுபான்மையினர் நல இயக்குரகம் தொலைபேசி எண்.044-28520033-ல்  தொடர்பு கொள்ளலாம். எனவே, திருப்பூர் மாவட்டத் திலுள்ள கிறிஸ்தவர்கள் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம்
ஈரோடு,செப்.5- விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறுகுறு விவசாயிக ளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவிகித மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவிகிதம் அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 5 வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று மற்றும் பத்திர நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப தாரர் சிறுகுறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடமிருந்து பெற்று இணைத்திட வேண் டும். வேளாண்மை பொறியியல் துறையினர் சான்று, செயற்பொறியாளர், வேளாண்மைத்துறை அவர் களிடம் பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் ஆகிய வற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கிட வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித் துள்ளார்.