திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

திருப்பூர் முட்புதரில் கிடந்த பின்னலாடை பணியாளர் சடலம்

திருப்பூர், ஜன. 20 - திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியிலுள்ள காலி இடத்தில் முட்புதரில் பின்னலாடை நிறுவன பணி யாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சடலம் கிடந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட வெள் ளியங்காடு பகுதியில் உள்ள காலியிடத்தில் முட்புத ரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதை பொதுமக்கள் பார்த்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்ததில், இளைஞர் ஒருவர் உடலில் வெட்டுக் காயங்களுடன்  உயிரிழந்து கிடந்தார்.  அவர்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை யில் கொலை செய்யப்பட்டவர் அருண்குமார் என்பது தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கொலை செய்யப்பட்ட அருண்குமார் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் பட்டுக் கோட்டையார் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 17ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட விபரம் தெரியவந் துள்ளது. தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டுள்ளனர்.

;