திருப்பூர், நவ. 2- சிறந்த கல்வியாளரை உரு வாக்கும் உயரிய பொறுப்பு ஆசி ரியர்களையே சாரும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனியன்று பள்ளிக்கல்வித்துறை யின் சார்பில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவிகித தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான் றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் மற்றும் கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலை வர், உடுமலை கே.ராதாகிருஷ் ணன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் கல்வித்துறைக்கென பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான அதிகப்படியான நிதி யினையும் ஒதுக்கி தந்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வியக் கும் வகையில் தமிழகத்தில் புதிய கல்வி புரட்சியினை உருவாக்கி வருகின்றோம். ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகின்ற அரசு செயல் பட்டு வருகிறது. ஒரு சிறந்த கல்வியாளரை உரு வாக்கும் உயரிய பொறுப்பு ஆசி ரியர்களையே சாரும். உங்களுக் கான சிறு.சிறு இடர்பாடுகளையும் அரசு முழுமையாக பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென தெரி வித்தார். இவ்விழாவில், மாவட்டத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற 300 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 100 சதவிகிதம் தேர்ச்சி வழங்கிய 2200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் என 2500 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த் திகேயன், சட்டமன்ற உறுப்பினர் கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கேயம்), திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேகர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் ரமேஷ், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் க.பழனிசாமி, ஆனந்தி, சிவக் குமார், கு.பழனிசாமி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.