திருப்பூர், நவ. 19- நவம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி திருப்பூர் மாவட்டத்தில் 120 இடங் களில் பிரச்சார கூட்டங்கள் நடத்துவதென அனைத்துத் தொழிற்சங்கங்கள் தீர்மா னித்துள்ளன. திருப்பூர் பார்க் ரோடு ஐஎன்டியுசி அலு வலகத்தில் அனைத்து தொழிற்சங்களின் ஆலோசனை கூட்டம் ஐஎன்டியுசி மாவட் டச் செயலாளர் அ.சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஏஐடியுசி சார்பில் என்.சேகர், ஏ.ஜெகநாதன், சிஐடியு சார்பில் டி.குமார், ஒய்.அன்பு, எல்பிஎப் சார்பில் ரங்க சாமி, ரத்தினசாமி, ஐஎன்டியுசி வி.ஆர்.ஈஸ்வரன், எச்எம்எஸ் சார்பில் முத்துசாமி, கௌதம், எம்எல்எப் சார்பில் மு.சம்பத், எம்.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் நவ.26 பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இம்மாவட்டத்தில் பெரு மளவில் விளம்பரப் பணி மேற்கொள்வது, 120 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, மாவட்டம் முழுவதும் பொது வேலைநிறுத்த நாளில் 30 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அனைத்து பனியன் முதலா ளிகள் சங்கங்களுக்கும் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள் ளது.
இதர பகுதி வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர், மோட்டார் வாகனத் தொழிலாளர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங் கேற்க ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்பு களின் நிர்வாகிகளுக்கு கடிதம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.