அவிநாசி, ஜன.23 - அவிநாசி அருகே உள்ள சேவூரில் குழாய் உடைப்பால் ஆற்றுக்குடிநீர் விநியோகம் நிறுத் தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக் குள்ளாக்கி உள்ளனர். அவிநாசியை அடுத்த சேவூர் - புளியம்பட்டி சாலை தண்டுக்காரன் பாளையம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத னால் இப்பகுதியிலும், சூரி பாளையத்திலும் குடிநீர் குழாய் ்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சிறுமுகை அருகே ஆலாகொம்பு நீரேற்று நிலையத்தில் இருந்து அவிநாசி, அன்னூர் மற்றும் சூலூர் ஒன்றிய கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் ஆற்று குடிநீர் இரு நாட்களாக நிறுத் தப்பட்டுள்ளது. மேலும் சேவூர் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியான ஆலத்தூர், பொங்க லூர், குட்டகம், புலிப்பார், மங்கரசு வலையபாளையம், தண்டுக்காரன் பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், வடுகபாளையம், நடுவச்சேரி, புஞ்சை தாமரைக் குளம், அய்யம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் ஆற்று குடி நீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், குடிநீர் வடிகால் வாரி யத்தின் சார்பில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இந்த குடிநீர் குழாய்கள் சிமெண்ட்டில் போடப்பட்டு உள்ளது. இதனால் குழாய் அடிக்கடி உடைந்து விடு கிறது. உடைந்த குழாய்களை சீர மைக்க சிமெண்ட் பயன்படுத்தப் படுகின்றன. சிமெண்ட் சரிவர காயாமல், ஈரப்பதத்துடன் இருப்ப தால் மீண்டும், தண்ணீர் கசிவு ஏற் படுகிறது. குழாயை சீரமைத்த பின் சுமார் 10 மணி நேரம் காய்ந்த பிறகு சிறுமுகையில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பிறகு மோட்டார் இயக்கப்பட்டு ஆற்று குடிநீர் வருகிறது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் வரும் போது மேலும் ஒரு நாள் தாமதாமாகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இத னால் குடிநீர் வாரியத்திற்கும் செல வினங்கள் அதிகமாகிறது. எனவே இப்பிரச்சனைகள் தவிர்க்கப்பட நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.