tamilnadu

img

வெளிமாநிலத்தவருக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனை

அவிநாசி, மார்ச் 21- அவிநாசி அரசு மருத்துவமனையில் வெளிமாநிலத்தவ ருக்கு  சனியன்று கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. உலகம் முழுவதும்  கொரோனத வைரஸ் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கின்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவிநாசி பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு 10க்கும் மேற்பட்ட வெளி மாநில பெண்கள் வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்க ளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிறுவனத்தின் சார்பில் அவிநாசி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு மீண்டும் நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.