tamilnadu

img

சாக்கடை கால்வாயில் விழுந்த பசு மாடு   4 மணி நேரம் போராடி மீட்பு

திருப்பூர், ஜன. 5- திருமுருகன்பூண்டி அருகே சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தவித்த பசு மாடு 4 மணி நேரம் போராட் டத்திற்குப் பின் மீட்கப்பட்டது. திருப்பூர், திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி ரிங்ரோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (54). இவர் வீட் டில் 5 பசு மாடுகளை வைத்து பால், கறந்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் சக்திவேல் அவருக்கு சொந்த மான மாடுகளை  தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில் சனியன்று அப்பகுதியில் மேய்ந்து  கொண்டிருந்த பசு மாடு அருகிலுள்ள 8 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தது. ஆழம் அதிகமாக இருந்ததால் முயற்சி செய்தும் பசுவால் வெளியே வர முடியவில்லை.  இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பசுவை கயிறு கட்டி மீட்க முயன்றனர். ஆனால் பொதுமக்களால் மீட்க முடி யவில்லை. எனவே அவிநாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்புத்துறை அதிகா ரிகள் கால்வாயின் மேற்பகுதியை உடைத்து பசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. இதில் பசு மாட்டின் உட லில் காயங்கள் ஏற்பட்டது.

;