tamilnadu

ஜன.12-ல் திருப்பூர் மாவட்டத்தில் 10 இடங்களில் புத்தகத் திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகள்

திருப்பூர், ஜன. 8 – 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட் டத்தில் 10 மையங்களில் மாணவ, மாணவியருக்கான கலை, இலக் கியத் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது பற்றி திருப்பூர் புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு இணைச்செயலாளர் எஸ்.சுப்பி ரமணியன் புதன்கிழமை விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர் கள் பங்கேற்கும் கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகளும் நடத் தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மாணவ, மாணவியருக் கான கலை இலக்கியத் திறனாய் வுப் போட்டிகள் ஜனவரி 12ஆம் தேதி (ஞாயிறன்று) நடத்தப்படு கின்றன.
மாணவர்களுக்கான போட்டிகள்
இதில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்க ளுக்கு ஓவியப் போட்டி நடை பெறும். பொம்மை உலகம், இயற்கைக் காட்சி, திருவிழா, உடற்பயிற்சி ஆகிய ஏதேனும் ஒரு தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும். 6 முதல் 8ஆம் வகுப்பு படிக் கும் மாணாக்கர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்படு கிறது. இரவு வான், மரங்கள் சூழ் உலகம், தூய்மை இந்தியா என்ற தலைப்பில் ஒன்றில் ஓவியம் வரைய வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் என் வாழ்வில் ஒரு நாள், என் இனிய தமிழ், என் கனவு ஆகிய ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை வரைய வேண்டும். 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய படிக்கும் மாணாக் கர்கள் ஓவியப் போட்டியில் பங் கேற்றால் கருத்துப்படம், அறி வியல் அதிசயம், ஆர்ப்பரிக்கும் அலைகள் என்பதில் ஒரு ஓவியம் வரைய வேண்டும். இப்பிரிவின ருக்கான கட்டுரைப் போட்டியில் நஞ்சில்லா உணவு, உழவே உயிர், பணம் படுத்தும் பாடு எனும் தலைப்பில் ஒன்றில் கட்டுரை எழுத வேண்டும். அதேபோல் இளமை – வலிமை, நிலவைத் தொடுவோம், ஆட்டிப்படைக்கும் ஆண்ட்ராய்டு, பெண்மையைப் போற்றுவோம் என்பதில் ஏதேனும் ஓர் தலைப்பில் கவிதை எழுத வேண்டும்.
போட்டி இடங்கள்
இப்போட்டிகள் திருப்பூரில் பல்லடம் சாலை ராமசாமி முத்தம் மாள் திருமண மண்டபம் (தொடர்பு எண்: 94422 61784, 90434 64007), குமார் நகர் சுப்பராயக்கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபம் (தொடர்பு எண்: 99440 47467, 99428 87500), காங்கேயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு வி.ஏ. தங்கவேலு திருமண மண்டபம் (தொடர்பு எண்: 94435 04156, 90953 39097), இடுவம்பாளையம் லட்சுமி மஹால் (தொடர்பு எண்: 95665 85488, 90475 47553), பெருமாநல்லூர் அம்மன் திருமண மண்டபம் (தொடர்பு எண்: 94434 74554, 94879 95128) ஆகிய இடங்களில் நடைபெறும். இத்துடன் அவிநாசி, வடக்கு ரத வீதி, கங்கவர் திருமண மண்ட பம், பல்லடம் பஸ் நிலையம் எதிரில் பிஎம்ஆர் சுப்புலட்சுமி திருமண மண்டபம், காங்கேயம் அருணாச்சல உடையார் வீதி டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையம், குன்னத்தூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம், ஊத்துக்குளி டவுன் காயத்திரி ஹோட்டல் ரிசப்ஷன் ஹால் ஆகிய மையங் களில் இப்போட்டிகள் நடைபெறு கின்றன.
விதிமுறைகள்
இப்போட்டியில் பங்கேற் போருக்கு தாள், வரைபட அட்டை வழங்கப்படும். முன்கூட்டியே எழுதி வரக்கூடாது, போட்டி நடை பெறும் இடத்தில் குறிப்புகள், ஏடுகளைப் பார்க்காமல் எழுத வேண்டும், கட்டுரை அதிகபட்சம் 4 பக்கம், கவிதை அதிகபட்சம் 2 பக்கம் இருக்க வேண்டும். மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். காலை 9 மணிக்கு போட்டி அரங் கில் இருக்க வேண்டும். நடுவர் குழுவின் முடிவு இறுதியானது. போட்டியில் முதல் பரிசு ரூ.500, 2ஆம் பரிசு ரூ.300, மூன்றாம் பரிசு ரூ.200 வீதம் ரொக்கம், நினைவுப் பரிசு வழங் கப்படும். பங்கேற்பாளர் அனை வருக்கும் பாராட்டு சான்றிதழ் தரப்படும். பிப்ரவரி 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், 17 ஆவது புத்தகத் திருவிழா மேடை யில் பரிசளிப்பு விழா நடை பெறும். வழக்கம்போல் திருப்பூர் மாவட்ட மாணவர்கள் இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகளில் பங்கேற்று புத்தகத் திருவிழா வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;