மணப்பாறை ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வழக்கறிஞர் சக்திவேலை ஆதரித்து வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தலைமையில் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
************
திருவெறும்பூர் ஒன்றியம் 17ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் யமுனாதேவியை ஆதரித்து பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
************
மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி 11ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பெரியசாமியை ஆதரித்து செட்டியபட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், சிஐடியு மாவட்ட பொருளாளர் சம்பத், தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஷாஜஹான், சிபிஎம் வட்டச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
************
மணப்பாறை ஒன்றியம் வேங்கைகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சிட்டு கருப்பையாவை ஆதரித்து பஞ்சாயத்து பகுதிகள் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், கட்டுமானத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
************