tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிபிஎம் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.27- குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை ஆவ ணம், தேசிய குடிமக்கள் பதிவேடு இவற்றை எதிர்த்து, பாபநாசத்தில் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  சி.பி.எம். மாவட்டச் செயற்கு உறுப்பினர் ஆர். மனோகரன், தி.மு.க மாவட்டச் செயலாளர் சு.கல்யாண சுந்தரம், சி.பி.எம் ஒன்றியச் செயலா ளர் பி.எம். காதர் உசேன் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.  ஜன.30 காந்தி நினைவு நாளில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நாடு தழுவிய அளவில்  நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தை, பாப நாசம் ஒன்றியம் அய்யம்பேட்டையில் இருந்து பாபநாசம் வரை 10. கி.மீ தூரம் நடத்தவும் ஆர்ப்பாட்டத்தில் அறைகூவல் விடப்பட்டது.

திருவாரூர் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியத்தில் புதூர், மாவூர், தப்பளாம்புலியூர் ஆகிய இடங்களில் முறையே ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், ஒன்றி யக்குழு உறுப்பினர் பி.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன் ஆகியோர் தலை மையில் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியக் கவுன்சிலர் வசந்தா கணேசன், பின்னவாசல் ஊராட்சி தலைவர் டி.ஆர்.தியாகராஜன், கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் எஸ்.சேகர், கே.எஸ்.கோசி மணி, கிளைச் செயலாளர்கள் எஸ்.ஏ.பக்கிரிசாமி, பி.ராஜேந்திரன், எம்.சக்திவேல், எல்.முருகவேல், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுந்த ரய்யா, மாதர் சங்க நிர்வாகி எஸ்.தமிழரசி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திரு வாரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக மாவட்ட தலைவர் டி.சந்திரா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலா ளர் எஸ்.தெரக்கோரியா, பொருளாளர் எஸ்.சோமு, வீ.ரேவதி, எம்.கிருஷ்ணமூர்த்தி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரி.சுர்ஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திருவாருர் திருவிக அரசு கல்லூரியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கவிதா தலைமை தாங்கி னார். போராட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் ஆனந்த் செயலாளர் சுர்ஜித் மாநில துணை செயலா ளர் ஆறு.பிரகாஷ் உரையாற்றினர்.

சீர்காழி 

மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் சார்பில் அரசி யலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் நாகை மாவட்டம் சீர்காழி வட்ட செயலாளர்  சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சிகள் சீர்காழி, வைதீஸ்வரன்கோயில், ஆச்சால்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.  கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன் விளக்கவுரையாற்றினார். வட்டகுழு உறுப்பினர்கள் கே. நாகையா, ஆர். நீலமேகம், பி.விஜய் மற்றும் கே.ஆர். பெருமாள், கே.அசாகன், ஜி. சம்பத், சண்முகம், தியாகராஜன் உள்ளிட்டோர் உறுதிமொழியேற்றினர்.

கும்பகோணம்

அனைத்துக் கட்சி சார்பில் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரும் நிகழ்ச்சி நாச்சியார்கோவில் கடைத்தெருவில் நடைபெற்றது. கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தருமையன், ரங்கசாமி கலியமூர்த்தி ஆனந்த், நாச்சியார்கோவில் கிளை செயலாளர் பார்த்திபன் திராவிடர் கழக நகர செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் குமார் அனைத்து முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த ரஹமத்துல்லா ஆமீன், ஆதில், பிரேம் நசீர், லெனின் மார்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் தவச் செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.  இதே போல் திருபுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி, மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி, நாகேந்திரன், சிபிஐ மணி மூர்தி தமாகா நாராயணசாமி இந்திய காங்கிரஸ் துளசிராமன் மற்றும் முஸ்லிம் அமைப்பு கள் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.  கட்சியின் தஞ்சை ஒன்றியம் சார்பில் வல்லம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் கே.அபிமன்னன் முன்னிலை வகித்தார். சங்கிலி முத்து, ராமராஜ், சேக் தாவூத், கண்ணன் கலந்து கொண்டனர்.

 

;