tamilnadu

திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

திருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.4- நகை ஏலம் ஜப்தி நடவடிக்கை யை நிறுத்திட வேண்டும். வெங்கா யத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள் முதல் செய்து குறைவான விலை யில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு - வைகை  இணைப்புத் திட்டம் அறிவித்த தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணா விரதம் திருச்சி மத்திய பேருந்து  நிலையம் அருகில் நடை பெற்றது. இதில் சனியன்று மூன் றாம் நாள் போராட்டம் நடை பெற்றது. அதில் ரத்தக் கண்ணீர் வடிக்கும் விதமாக முகத்தில் சாயம் பூசிக்கொண்டு விவசாயி கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஜன.4- அரியலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வரும் 22-ஆம் தேதி காலை 10.30  மணியளவில் நடைபெறுகி றது. எனவே, ஓய்வூதியதாரர் கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 10-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவ லகத்தில் இரண்டு பிரதிக ளுடன் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் த.ரத்னா தெரி வித்துள்ளார்.

நகைக்காக மூதாட்டியை கொன்ற பெண்ணுக்கு ஆயுள்

தஞ்சாவூர், ஜன.4-  தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அடுத்த வேப்பங் குளத்தை சேர்ந்தவர் கிளி யம்மாள் (85), தனியாக வசித்து வந்தார். தனது பக்கத்து வீட்டில் வசித்த செல்வி (39), என்பவரை அழைத்துக் கொண்டு கிளி யம்மாள் அடிக்கடி மருத்துவ மனைக்கு செல்வது வழக்க மாம். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி கிளி யம்மாள் வழக்கம் போல செல்வி வீட்டுக்கு சென்றார். அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறிக்க நினைத்த செல்வி, அவரை கட்டையால் அடித்து கொலை செய்து, உடலை ஒரு சாக்குப் பையில் கட்டி சாலையோரம் வீசியுள்ளார். இதுகுறித்து மதுக்கூர் காவல்துறையினர் விசா ரணை நடத்தி, செல்வியை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந் தது. நீதிபதி எழிலரசி விசா ரணை நடத்தி செல்விக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அபரா தம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை யும் விதித்து உத்தரவிட்டார்.

இருதய சிகிச்சை இலவச முகாம்

மன்னார்குடி, ஜன.4- திருவாரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை DEIC மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய கோளாறு கண்டறியும் சிகிச்சை முகாம் மற்றும் இருதய சிகிச்சை முகாம் வரும் 8-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் நடைபெறும். முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 13 வயது வரை உள்ள குழந்தைக ளுக்கு இருதய கோளாறு நெஞ்சுவலி, நெஞ்சு பட படப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவைக ளுக்கான கட்டணம் இல்லாத சிறப்பு சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொது மக்கள் பயன் பெற திருவா ரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

;