தஞ்சாவூர், ஏப். 3 -தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநராக டாக்டர் அ.காந்தி(எம்.எஸ்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதாரப் பணிகள் இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் மார்ச் 31 (ஞாயிறு) அன்று பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் புதிய இணை இயக்குநராக டாக்டர் அ.காந்தி(எம்.எஸ்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அ.காந்தி இதற்கு முன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் மருத்துவ அலுவலராக பணியாற்றிவந்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரப் பணிகள்இணை இயக்குநருக்கு அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.