tamilnadu

img

சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்

தஞ்சாவூர் ஜூலை.13- வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி மற்றும் ஐயா புட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு பான் செக்கர்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. லயன்ஸ் சங்கத் தலைவர் வி.ஆர்.அன்பழகன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் ஜி.முத்தழகி வரவேற்றார். லயன்ஸ் அமல் ஸ்டாலின், ஐயா புட்ஸ் நிறுவனர் பீட்டர்பாபு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்.கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.  தஞ்சாவூர் சரக துணைப் போக்குவரத்து ஆணையர் செ.உதயகுமார், முன்னாள் லயன்ஸ் ஆளுநர் முகமது ரபி ஆகியோர் பேசினர். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி கேத்தலினா வரவேற்றார். முன்னாள் கோவை மாவட்ட முதன்மை போக்குவரத்து வார்டனும், பொள்ளாச்சி பிரின்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான கமலக்கண்ணன் வினாடி- வினா நிகழ்ச்சி நடத்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஹெச்.அப்துல் நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்த்துறை பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.  இதே போல் தமிழ்வேல் உமா மகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில்  ஆங்கிலத் துறை துணைத்தலைவர் கோ.சண்முகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் இராசாமணி வரவேற்றார். தமிழ்த்துறை துணைப் பேராசிரியர் மகேசுவரி நன்றி கூறினார்.