tamilnadu

திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.13-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குதிமுக முன்னாள் அமைச்சர் நேரு தலைமைவகித்தார்.பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிட மணி, இந்திரஜித், சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சிமாவட்டச் செயலாளர் அருள், நீலவாணன்,காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன், பார்வர்டு பிளாக் கட்சி வெங்கடேசன், இந்திய ஜனநாயக கட்சி செல்வகுமார் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.