tamilnadu

நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

5 வருட பணி அனுபவம்: ஓமன் நாட்டில் பணி வாய்ப்பு

தஞ்சாவூர், ஜன.10- ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சியுடன், ஓஹெச்எல் எக்விப்மன்ட் 33 கிலோ வாட், டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூசன், டவர் மெயின்டனென்ஸ் 11/33/132 கிலோவாட்,  ஓஹெச்எல் மற்றும் ஹெச்டி ஓவர்ஹெட் பழுதுபார்த்தல் ஆகிய பிரிவுகளில் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்.  தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.33,000 முதல் பணி அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலை அளிப்போரால் வழங்கப்படும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceq106@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண், 42 - ஆலந்தூர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான  www.omcmanpower.com வாயிலாகவும் மற்றும் 044-22505886, 8820634389, 22502267 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலை.யில் தமிழிசைப் போட்டி

தஞ்சாவூர், ஜன.10- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வியாழ னன்று இசைத்துறையின் சார்பாக தமிழக முதல மைச்சர் அறக்கட்டளை தமிழிசைப் போட்டி மற்றும் பரி சளிப்பு விழா நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு கலைப்புல முதன்மையர் முனை வர் பா.ஷீலா தலைமை வகித்தார். தமிழிசைப் போட்டி யில் சென்னை தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை  பல்கலைக்கழக மாணவர் வி.கிருஷ்ணசாய் முதல்  பரிசும், சென்னை பாரத் பல்கலைக்கழக மாணவர்  சூர்யா சுந்தர்ராஜன் இரண்டாம் பரிசும், திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மாணவி சௌந்தர்யா மாதவன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.  சென்னை தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக மாணவர் வி.முகுந்தசாய், திருவை யாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவி கோ. வஸீதஸ்ரீ, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி  மாணவி ச.ஸ்ருதி ஆகியோர் சிறப்பு பரிசுகள் பெற்ற னர். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனை வர் கோ.பாலசுப்ரமணியன் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.

குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்

ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் உறுதி

நாகர்கோவில், ஜன.10- களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் புதனன்று சுட்டு கொல்லப்பட்டார். இதை யடுத்து தமிழக காவல்துறை டிஐஜி திரிபாதி, தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் குமரி மாவட்டம் வந்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். களியக்கா விளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய ஐஜி சண்முக ராஜேஸ்வரன் அங்கேயே முகாமிட்டு கொலையாளிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். வெள்ளியன்று அவர், தக்கலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறுகையில், உதவிஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. அவர்கள் குற்றவாளி களை தேடி வருகிறார்கள். விசாரணையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடு வார்கள் . என அவர் கூறினார்.  இதற்கிடையே களியக்காவிளை சோதனை சாவடியில் வில்சனை கொலை செய்த தீவிரவாதிகள், சம்பவம் நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது. மார்த்தாண்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள ஒரு கண்காணிப்பு காமிரா வில் சம்பவம் நடந்த அன்று மாலை 6 மணிக்கு தீவிரவாதிகளின் உருவம் பதிவாகி உள்ளது. இதனை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தீவிரவாதிகள் இருவருக்கும் மேலும் சிலர் உதவி செய்தி ருக்கலாம் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. அவர்களையும் காவல் துறை யினர் அடையாளம் காண முயற்சி மேற் கொண்டுள்ளனர் . தீவிரவாதிகள் நாகர் கோவி லில் இருந்து களியக்காவிளை செல்லும் போது மார்த்தாண்டத்தில் இறங்கி, அங்கி ருந்தபடியே கொலையில் ஈடுபட திட்டம் தீட்டி இருக்கவேண்டும் என்றும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

கல்வி உதவித்தொகை: ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜன.10- புதுக்கோட்டை மாவ ட்டத்தில் பிற்படுத்த ப்பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் இன மாணவ, மாணவி களுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம் என மா வட்ட ஆட்சியர் பி.உமாம கேஸ்வரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் பிற மா நிலங்களில் உள்ள  பட்டி யலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும்  பட்ட  மேற்படிப்பு பயிலும் தமிழ்நா ட்டைச் சேர்ந்த பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படு த்தப்பட்டோர்  மற்றும் சீர்மர பினர் மாணவ, மாணவிய ர்களில் குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.2 லட்சத்திற்கு மிகா மல் உள்ள மாணவ, மாணவி யருக்கு கல்வி  உதவித்தொ கையாக மாணவர் ஒருவரு க்கு ஆண்டிற்கு ரூ.2  லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை பெற தகுதியடைவர்களாக தமி ழ்நாட்டை சார்ந்த மாணவ, மாணவியர்கள், பட்டி யலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். மேற்படி கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பம் குறித்து மாவ ட்ட ஆட்சியர் அலுவலக த்திலுள்ள மாவட்ட  பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலகத்தினை அணுகி பயன்பெறலாம்.

;