கும்பகோணம், ஜூன் 4-கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் தோப்பு தெருவில் விடுதலை போராளிகள் பீமாராவ் பாய்ஸ் சார்பில் தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டஅளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் 35 அணிகள் போட்டியிட்டன. இதில் திருவிடைமருதூர் தோப்பு தெரு சேர்ந்த பீமாராவ் பாய்ஸ்ஹரிஷ் அணியினர் முதல் பரிசானரொக் கம் ரூ.4004 கேடயமும் பதக்கங்களும் விசிக மாவட்டச் செயலாளர் தமிழருவி, விழுப்புரம் கிழக்கு மாவட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விஜி என்கிற விஜயலட்சுமி ஆகியோர் வழங்கினர்.இரண்டாம் பரிசு வேப்பத்தூர் ஜூனியர் அம்மன் பாய்ஸ் அணியினருக்கு ரூ.3003 ரொக்கம் கேடயமும் பதக்கங்கள் திருவாடுதுறை ஆதீன மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி வழங்கினார். மூன்றாம் பரிசு ரூ.2002 நாகப்பட்டினம் வெண் ணிலா அணியை சேர்ந்தவர்களுக்கு பதக்கங்களும் கேடயமும் வழங்கப் பட்டது. நான்காம் பரிசு திருவாரூர் மாவட்டம் கலைஞர் கபடிக்குழு அணியினருக்கு ரூ.1001 பதக்கங்களும் கேடயம் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசுதஞ்சை மாவட்டம் வெட்டிக்காடு பர்மாகாலனி கபடி குழு அணியினருக்கு ரொக்கம் பதக்கங்களும் வழங்கப் பட்டது. சிறந்த ரைடர் சிறந்த அணி சிறந்த ஆல்ரவுண்டர்க்கு ரூ.1001 ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரிதினேஷ் சபரி மற்றும் தோப்பு தெரு இளைஞர்களும் நற்பணி மன்றமும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.