tamilnadu

img

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.311 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு

தஞ்சாவூர், நவ.17- தஞ்சாவூரில் சனிக்கிழமை 66 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமி ழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மொத்தம் 2, 780 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கி பேசுகையில், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பயிர் கடனாக ரூ 311 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.  நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசாமி, திருஞானசம்பந்தம், இளமதி சுப்பிரமணியன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் காந்தி, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட னர்.