tamilnadu

img

வேட்பாளர், தலைவர்கள் தலைவர்கள்

திருநெல்வேலி, ஏப்.18 -நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லையில் தலைவர்கள் வாக்களித்தனர்.திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் தனது ஊரான பணகுடி அருகே உள்ள ஆவரைகுளத்தில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார். மதிமுக பொது செயலாளர்வைகோ தனது ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கே.ஜி.பாஸ்கரன் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். எம்.எல்.ஏ மைதீன்கான் டவுன் உழவர் சந்தை எதிரே உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.எம்.எல்.ஏ லெட்சுமணன் பாளைதெற்கு பஜாரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் பாளை ஜெயேந்திரா பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா தச்சநல்லூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். மதிமுகமாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் பாளை காதுகேளாதோர் பள்ளியில் வாக்களித்தார்.இதே போல் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மற்றும் எஸ்பிஅருண்சக்தி குமார் ஆகியோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.


தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, போல்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் எஸ்பிஜி கோவில்தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னையில் வாக்களித்தார்.