திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

ஏ.வி.சி கல்லூரி கணிதத்துறை கருத்தரங்கு

மயிலாடுதுறை, ஜன.25- மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரி கணிதத்துறை சார்பில் பல்கலைக்கழக மானிய குழு நிதி உதவியுடன் கருத்த ரங்கம் வியாழக்கிழமை நடந்தது. கருத்த ரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாக ராஜன் தலைமை வகித்தார். செயலர் கி. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். தென் ஆப்பிரிக்கா ப்ரி ஸ்டேட் பல்க லைக்கழகத்தின் கணிதம் மற்றும் பயன் பாட்டு கணித்ததுறை முதுநிலை ஆய்வா ளர் டாக்டர் எஸ். பாலச்சந்திரன் சில வகை வரைபடங்களின் தீவர ஜாக்ரெப் குறியீடு கள் குறித்து பேசினார்.  இதில் கணிதத்துறை பேராசிரியர்கள், திரளான மாணவர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக கணிதத்துறை தலைவர் ஏ. கோவிந்தராசு வரவேற்றார். பேராசிரியர் எஸ்.கோவிந்தரான் நன்றி கூறினார்.

;