tamilnadu

img

கண்கள் தானம்

 கும்பகோணம், ஜூன் 8- கும்பகோணம் அருகே நாச்சியார்கோ யில் அஞ்சலி வீடியோ கேபிள் விஷன் உரிமையாளர் மற்றும் லேம்ப் சிட்டி ரோட்டரி சங்க தலைவருமான எஸ்.செந்தில்குமார் தந்தை ஓய்வூதியர் சங்க பொருளாளர் ஜி.சீனிவாசன் சனிக்கிழமை மதியம் காலமானார். இவர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முக்கிய பொறுப்பாளராகவும், பல போராட்டங்களில் சிறை சென்று தன்னை இணைத்துக் கொண்டு உறுதியுடன் இருந்தார். ஆரம்பப் பள்ளியில் 28 வருடங்கள் தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பின்பு ஓய்வூதியர் சங்கத்தில் 17 ஆண்டு சங்க வளர்ச்சிக்கு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சங்க பொருளாளராக இருந்துள்ளார். இறந்தும் இறவா கண் தானம் செய்யப்பட்டது. அவர் காலமான தகவல் அறிந்து ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் நாச்சியார்கோவில் ரோட்டரி சங்க அங்கத்தினர்கள், உறவினர்கள் நண்பர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.