tamilnadu

img

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குச்சேகரிப்பு

தருமபுரி, ஏப்.10-தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி ஒன்றியத்தில் வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப் நடைபெற்றது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதனன்று அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி ஒன்றியம், வி.ஜெட்டிஅள்ளி, ரயில்வே கேட், கே.சி.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரத்தில், ஏழைகளுக்கு மனைப்பட்டா கிடைக்கவும், நீண்ட காலம் வீடுகட்டி குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா கிடைக்கவும், அனைத்து கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பெற்று தர தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இப்பிரச்சாரத்தில், கட்சியின் தருமபுரி ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, மாவட்டகுழு உறுப்பினர் கே.பூபதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி.வெங்கட்ராமன், எம்.மீனாட்சி, கே.சுசிலா, கோவிந்தசாமி, கே.சி.கே.மார்க்ஸ், பழனி, மாது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.