tamilnadu

தர்மபுரி முக்கிய செய்திகள்

சுவர் விளம்பரம் செய்த 6 பேர் கைது                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              தருமபுரி, டிச. 25- ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, சுவர் விளம்பரம் செய்த 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.   ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடை பெறுகிறது. இத்தேர்தலில் சுவர் விளம்பரம்  செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித் துள்ளது. இந்தநிலையில் தருமபுரி மாவட் டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து ஓட்டு சேகரித்து வரு கின்றனர். அதேநேரம் சில வேட்பா ளர்கள் தேர்தல் சின்னங்களை சுவர் விளம்பரம் செய்து ஓட்டு சேகரித்து வந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, இதன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் ஏ.பள்ளிபட்டியில் 2 பேரும்,  மதிகோன்பாளையம், இண்டூர், பாலக் கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதி களில் தலா ஒருவர் வீதம், 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருமண மண்டபத்திற்கு ‘சீல்’ வைப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     தருமபுரி, டிச. 25- தருமபுரியில் ஆக்கிரமித்து கட்டப் பட்டதாக ரோட்டரி திருமண மண்டபத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.  தருமபுரி 4-ரோடு அருகே கிருஷ்ணகிரி சாலையின் மேற்கு பகுதியில் பழைய வட் டார வளர்ச்சி காலனி உள்ளது. இப்பகுதி யில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ரோட்டரி சங்கத்தின் மூலம் அந்த பகுதியில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. அந்த மண்டப வளாகத்தையொட்டி கட்டப்பட்ட இணைப்பு கட்டிடத்தில் ரோட்டரி தையல் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.  இந்த நிலையில் அந்த திருமண மண்டபம் மற்றும் தையல்பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் வட்டார வளர்ச்சி காலனிக்கு சொந்தமான அரசு இடம் என்று  ஆவணங்கள் மூலமாக கண்டறியப்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து திரு மண மண்டபம் மற்றும் தையல் பயிற்சி மையம் ஆகியவற்றை காலி செய்து அரசி டம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட நிர் வாகத்தினருக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்நிலையில் திங்களன்று இரவு அந்த பகுதிக்கு சென்ற தருமபுரி வட்டாட் சியர் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சுதாகரன்,  கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும்  வருவாய்த்துறையினர் திருமண மண்டபம் மற்றும் தையல் பயிற்சி மையத்தை பூட்டி  அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

;