வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

பட்டுப்பூச்சி கொட்டகை தீயில் கருகி நாசம்

தருமபுரி, டிச.29- பாப்பிரெட்டிபட்டி அருகே பட்டுப்பூச்சி கொட்டகை பற்றி எரிந்ததில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாகப் புகார் எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அடுத்துள்ள அதிகாரப்பட்டி பகுதியை  சேர்ந்தவர் அழகிரி (60). இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பட்டுப் பூச்சி கொட்டகை வைத்திருந்தார். இந்த  நிலையில் கடந்த 25ஆம் தேதி இக்கொட்ட கையில் தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப் பட்டது. உடனே அழகிரி பாப்பி ரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  இதுகுறித்து அழகிரி பாப்பிரெட்டிப் பட்டி காவல் நிலையத்தில் அவரது பட்டுப் பூச்சி கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி இருப்பதாகப் புகார் செய்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;