tamilnadu

img

தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டம்..... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பேரவை அறிவிப்பு....

தருமபுரி:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2021 பிப்.2 ம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் தொடர் மறியல்- சிறைநிரப்பும் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை தருமபுரியில் மாநிலத்தலைவர் மு.அன்பரசு தலைமையில்நடைபெற்றது. இப்பேரவையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 ஜனவரி 5 ம் தேதிமுதல் 12ம் தேதிவரை மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 2021 ஜனவரி 19 முதல் 20 ம் தேதிகளில் மண்டல் அளவில் போராட்ட ஆயத்தமாநாடு நடத்துவது, இதைத்தொடர்ந்து 2021 ஜனவரி 27 ல் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட் டினை மதுரையில் நடத்துவது, இதன்பின் 2021 பிப்ரவரி 2 ம் தேதிமுதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறை நிரப்புவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

அ.சவுந்தரராசன்
முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் நிறைவுரையாற்றிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழில் இல்லை, பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு இல்லை. ராணுவ தளவாடங்கள் முதல் விண்வெளி ஆய்வு மையம் வரை பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குவிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கம் வைக்க உரிமை இல்லை. தொழிலாளர்களுக்கு, ஊழியர் களுக்கு ஊதியம் குறைப்பு செய்வதுஎவ்வாறு என்று மத்திய ஆட்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். மருத்துவர்கள், போலீசார் சங்கம் வைக்கக்கூடாது என்று ஆளும் வர்க்கத்த்தின் குரலாக நீதிமன்றம் சொல்கிறது. தொழிலாளர் களுக்கும், ஊழியர்களுக்கும் துரோகம் இழைக்கும் போது தான் சங்கம்வைக்கும் அவசியம் ஏற்படுகிறது.விவசாயிகளது தொடர் போராட்டத் தின் விளைவாகத்தான் இலவச மின்சாரம் அமல்படுத்தப்பட்டது. வலிமையான போராட்டத்தின் விளைவாகத்தான் பல உரிமைகளைப் பெற முடிந்தது. ஆகவே, ஊழியர் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வலிமையான போராட் டம் நடத்த ஒன்றுபட வேண்டும்” என்றார்.

உ.வாசுகி
மாநில பிரதிநிதித்துவப் பேரவையின் ஒரு பகுதியாக நடைபெற்ற மகளிர் அமர்விற்கு மாநில செயலாளர் தெ.வாசுகி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் வரவேற்றார். இதில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசுகையில், “கொரோனா பெருந்தொற்றின் போது அரசு ஊழியர்கள்மக்களுக்காக சிறந்த பணியாற்றினர். இது பாராட்டத்தக்கது. சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு உள்ளது. உலகில் பல போராட்டங்களில் பெண்கள் முன்நின்று நடத்திய போராட்டங்கள் பெரும் வெற்றிகண்டுள்ளன. ஜாக்டோ- ஜியோ போராட்டங்களில் கூட பெண்கள் முன்நின்று போராடி சிறை சென்றுள்ளனர். தில்லியில் தற்போது நடைபெறும் போராட்டத்தில் கூட ஏராளமான பெண்கள், ஆண்களுக்கு இணையாக முன்நின்று போராடி வருகின்றனர்” என்றார்.மேலும், கொரோனா காலத்தில் ஊழியர்கள், தொழிலாளர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராட கூட எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் உரிமையை காக்கவும், தொழிலாளர் உரிமையை காக்கவும், தமிழகத்தில் சாதி, மதபேதமற்ற, போதையற்ற, வன்முறையற்ற சமூகமாக மாற வேண்டும். இதற்காக போராட வேண்டும் என்றும் கூறினார்.

;