சென்னை, பிப். 24- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெட்ட நோக்கத்தோடு இந்தியா விற்கு வந்துள்ளதாக அகில இந்திய சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டுக் கழகம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கழ கத்தின் மாநில பொதுச் செய லாளர் ஏ.ஆறுமுகநயினார், பொருளாளர் ஆர்.ராஜேந்தி ரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அமெரிக்காவுடன் வர்த் தக உறவுகளைப் பெற்றி ருந்த சிறப்பு மற்றும் முன்னு ரிமை அந்தஸ்து நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா கழற்றிவிடப்பட்டிருக்கிறது. இந்தச்சூழலில் அமெரிக்க அதிபரின் வருகையின் உண் மையான நோக்கம், இந்தியா வின் சந்தையைக் கைப்பற்று வதேயாகும். அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நலன் களுக்கு மேலும் உதவிகள் செய்யக்கூடிய விதத்தில் அனைத்து நிபந்தனைகளை யும் ஏற்கச் செய்திட இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க உள்ளார். ரஷ்யாவுடனான ஒப்பந் தங்களை ரத்து செய்ய வேண்டும், ராணுவ தளவாட உற்பத்தியிலிருந்து அரசு முழுமையாக வெளியேற வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை அமெ ரிக்கா விதிக்கிறது. இந்திய அரசும், அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களையும், நிபந்த னைகளையும் ஏற்கும் மன நிலையிலேயே உள்ளது. அதற்கேற்ப ராணுவத் தள வாடங்கள் உற்பத்தி மற்றும் எல்ஐசி போன்ற நிதித்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்த்திடும் முயற்சிகளை செய்து வருகிறது.
இந்த சந்திப்பின்போது 10 அம்சங்களில் ஒப்பந்தம் ஏற்ப டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு நிகழ்ந் தால் இந்திய விவசாயம் பாதிக்கப்படும். மருந்துக ளின் விலைகள் உயரும். பொருளாதாரம் சீர்குலை யும். கெட்ட நோக்கத்தோடு வந்துள்ள டிரம்ப்பை எதிர்த்து தில்லி, கல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடக்கிறது. அதன் ஒரு பகுதி யாக சென்னையில் துண்டு பிரசுர விநியோகம் நடை பெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.