புதுச்சேரி, ஜன. 3- புதுச்சேரி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். இவர் பய ணம் செய்யும் காருக்கு டீசல் போடுவதற்காக, கடற்கரை சாலையிலுள்ள அமுதசுரபி கூட்டுறவு பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது, அமைச்சரின் காருக்கு டீசல் போட ஊழி யர்கள் மறுத்துள்ளனர். இத னால் தான் சொந்த பணத்தில் காருக்கு டீசல் நிரப்பிய பின்னர் தனது தொகுதியான காரைக்காலுக்கு வியாழ னன்று (ஜன.2) சென்று விட்டார் அமைச்சர். பிறகு, நடந்த அமைச்சர வைக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை (ஜன.3) மீண்டும் புதுச் சேரிக்கு வரவேண்டும் என்ப தால் காரில் டீசல் போடுவ தற்கு காரைக்காலில் உள்ள கூட்டுறவு பெட்ரோல் பங் கிற்கு சென்றுள்ளனர். அங் கும் டீசல் நிரப்பவில்லை. எனவே, தனது வாக னத்தை காரைக்காலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு விட்டு, புதுச்சேரி அரசிற்கு சொந்தமான பிடிடிசி பேருந் தில் புதுவைக்கு பயணம் செய்து அமைச்சரவைக் கூட் டத்தில் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களின் அன்றா டம் பயன்படுத்தும் வாக னங்களுக்கான டீசல், கூட்டு றவு நிறுவனமாக அமுதசுரபி பெட்ரோல் பங்கில் தான் நிரப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரி அமைச்சரவை அலுவலகம் அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு பெட்ரோல் பங்கிற்கு இன்னும் வழங் கப்படவில்லை என கூறப் படுகிறது. இதனால், அமைச் சரின் வாகனத்திற்கு டீசல் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதேபோல் மற்ற அமைச் சர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. அமைச்சர் களுக்கே அவர் சம்பந்தப் பட்ட அரசின் கீழ் உள்ள கூட்டுறவு பெட்ரோல் பங்கில் டீசல் போடாத சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரப் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.