சென்னை,ஜன.3- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி அமோக வெற்றியடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 27 மாவட்டங்களில் மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஜனவரி 2 அன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை,3 ஆம் தேதியன்றும் நடைபெற்றது. இதில் ஜனவரி 3 அன்று இரவு 9 மணி நிலவரப்படி, 5067 ஒன்றியக்கவுன்சில் பதவிகளில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் 2338 இடங்களிலும் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி கள் 2185 இடங்களிலும் மற்ற கட்சிகள் 445 இடங்களிலும் வெற்றி பெற்றன. 515 மாவட்ட கவுன்சில் பதவிகளில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் 271 இடங்களிலும் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் 242 இடங்களிலும் வெற்றிபெற்றன.
சிபிஎம் வெற்றிபெற்ற இடங்கள்
இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள், நீலகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா 1 மாவட்ட கவுன்சிலில் வெற்றிபெற்றுள்ளனர். 31ஊராட்சி ஒன்றிய கவுன்சில் உறுப்பினர்களாக வெற்றிபெற்றுள்ளனர். 54 ஊராட்சி மன்றங்களின் தலைவர்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். நீலகிரி மாவட்ட ஊராட்சி வார்டு 1 (சேரங்கோடு)-ல் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.எம்.அனீபா மாஸ்டர் 4692வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு 4 (நன்னிலம்) -ல் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜே.முகமது உதுமான் வெற்றிபெற்றார். இவை தவிர தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். (விபரம் 3, 8 பக்கங்கள்)