யோகிபாபுவை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அவரின் கால்ஷீட் டைரி நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்த மூஞ்சிக்கெல்லாம் ஹீரோ செட்டாகுமா என்று கேட்ட யோகிபாபு காக்டெய்ல் என்ற படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் முருகன் இயக்கும் படம் ‘காக்டெய்ல். ஆஸ்திரேலிய பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. யோகிபாபுவுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடிக்கிறாராம். நாய்களுக்கு முடிவெட்டும் கடை வைத்திருப்பவராக நடிக்கிறாராம் யோகிபாபு.
ஜி.வி. பிரகாஷின் உதவியாளரான சாய் பாஸ்கர் காக்டெய்ல் படம் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.