தனிநபர் ரூ.50,000 வரை ரொக்கமாக எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவித்ததை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது. இதுவரையில் தமிழகத்தில் மொத்தமாக 1 கோடி 87 லட்சம் ரூபாய் ரொக்கம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகளும், 702 கண்காணிப்பு குழுக்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வங்கி கணக்கில் அதிகப்படியான பணம் பரிவர்தனை நடைபெற்றால் அது பற்றி தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுவரை 1312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.