tamilnadu

img

தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு

 சென்னை,டிச.30- ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரி யேசன்ஸ் நிறுவனம், தாக்கல் செய்துள்ள மனு வில், ரஜினிகாந்த நடிப்பில் லைக்கா தயாரித்த  2.ஓ  படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை  ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து  23 கோடியே 70 லட்சம் ரூபாய் ஆகிவிட்ட தாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். தங்களுக்கு வழங்க வேண்டிய இந்த தொகையை வழங்காமல், லைக்கா நிறுவனம்  தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்  டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்  தராஜ், ஜனவரி 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.