tamilnadu

img

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று...

ஹைதராபாத் 
தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தில் முக்கிய நடிகையாக இருப்பவர் தமன்னா. மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் 2005-ஆம் ஆண்டு இந்தி, தெலுங்கு 2 படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரியளவில் கைகொடுக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு தமிழில் கேடி படம் மூலம் வில்லியாக நடித்தார். இந்த படம் தமன்னாவுக்கு தகுந்த இடத்தை தர இன்று வரை சுமார் 30-க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடப்பாண்டில் 3 படம் கைவசம் வைத்துள்ள தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.            

தெலுங்கனா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் வெப் தொடர் படப்பிடிப்பின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது தமன்னா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.