தஞ்சாவூர் ஜன,12- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்க ளாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செங்கிப்பட்டி ஊராட்சி 6 வது வார்டு உறுப்பினர் ஜி.வசந்தா ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஐ.ஆலிசா மேரி புதுக்குடி ஊரா ட்சி மன்ற துணைத் தலைவராக தேர்வு செய்ய ப்பட்டார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, முடிவுகள் வெளியான ஊரக உள்ளா ட்சி தேர்தலில் செங்கிப்பட்டி ஊராட்சி வார்டு எண் 8 ல் டி.அம்சவள்ளி, புதுக்குடி ஊராட்சி வார்டு எண் 8 ல் பானுமதி விஜயகுமார், பாளையப்பட்டி ஊராட்சி வார்டு எண் 2 ல் எம்.சசிகலா, வெண்டையம்பட்டி ஊராட்சி வார்டு எண் 9 ல் எஸ்.சந்திரா, சானூரப்பட்டி ஊராட்சி கரியப்பட்டி வார்டு எண் 4 ல் என்.தெய்வானை, கோவில்பத்து ஊராட்சி வார்டு உறுப்பினராக எம்.ஜி.சரவணன் ஆகி யோர் வெற்றி பெற்றுள்ளனர்.