செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

மதுபானக் கூடமாகிய  பயணியர் நிழற்குடை

 

 தஞ்சாவூர், ஜன.19-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரி யங்கோட்டை ஊராட்சி மாசாகாடு சாலையில், அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளிக்கு அருகில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை சமூக விரோதிகள் ஆக்கிர மித்து இரவு, பகல் எந்நேரமும் மது அருந்தி விட்டு பாட்டில் களை உடைத்து வீசி விடுகின்றனர்.  இதனால் பயணிகள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாண வர்கள் மழைக்கும், வெயிலுக்கும் நிழற்குடையில் ஒதுங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;