tamilnadu

img

தஞ்சையில் வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம்

தஞ்சாவூர், டிச.4- மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோ தக் கொள்கைகளுக்கு எதி ராக வரும் 2020 ஜனவரி 8 ஆம் தேதி புதன்கிழமை அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.  முதலாளிகளுக்கு ஆதர வாக தொழிலாளர் நலச்சட் டங்களை திருத்தக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்க ளை தனியார் மயமாக்க கூடாது. குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 என நிர்ண யம் செய்ய வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். விவசாயி கள் மற்றும் மாணவர்களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.  பொது வேலை நிறுத் தத்தை விளக்கி, தஞ்சை விரைவுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு செவ் வாய்க்கிழமை மாலை அனை த்து மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மோ கன்ராஜ், எல்பிஎஃப் மாவட் டச் செயலாளர் கு.சேவியர், ஏஐசிசிடியு மாவட்டச் செய லாளர் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் நிறைவுரையாற்றினார். அனைத்து தொழிற்சங்கங்க ளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.