tamilnadu

திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருடிய பத்தாவது குற்றவாளி கைது மார்ச் 17 வரை நீதிமன்றக் காவல்

கும்பகோணம், மார்ச் 4- திருச்சி அருங்காட்சிய கத்தில் சிலைகள் திருடிய வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 10-வது குற்றவாளி சர வணபெருமாளை சிலை  கடத்தல் பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். இதுகுறித்து சிலை கட த்தல் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: திருச்சி கோட்டை அரு ங்காட்சியகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 31 சிலை கள் திருடப்பட்டன. இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்த னர். இவ்வழக்குத் தொட ர்பாக 9 பேர் கைது செய்ய ப்பட்டனர். கைது செய்யப்ப ட்டவ ர்களிடமிருந்து 31 பஞ்ச லோக சிலைகள் மீட்கப்ப ட்டன. அதேவேளையில் இந்த வழக்குத் தொடர்பாக காவல்துறையினர், 10-வது  குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இவ் வழ க்குத் தொடர்பாக தேட ப்பட்டு வந்த காரைக்குடி நெற்புகைபட்டியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சரவ ணபெருமாள் (40) கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி  சிலை தடுப்பு காவல்துறையி னர் டி.எஸ்.பி.கதிரவன் தலை மையில் ஆய்வாளர் லதா மற்றும் காவல்துறையினர் மத்திய பேருந்து நிலை யத்தில் சரவண பெருமாளை  கைது செய்தனர். கும்ப கோணம் சிலை சம்பந்த ப்பட்ட வழக்குகளை விசா ரித்து வரும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிபதி விஜயலட்சுமி சரவண பெரு மாளை மார்ச் 17 அன்று வரை  நீதிமன்ற காவலில் வைக்க  உத்தரவிட்டார். காவல்து றையினர் பலத்த பாதுகாப்பு டன் திருச்சி சிறைக்கு அழை த்துச் சென்றனர். மேலும் பட்டு க்கோட்டையில் நிதி நிறுவ னத்தில் 6 கிலோ தங்கம் திரு டிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான சர வணபெருமாள் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.