தஞ்சாவூர், ஏப்.22-தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ஹரிஷ் மருத்துவமனை என்ற பெயரில் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் நடத்தி வருபவர் டாக்டர் வி.சௌந்தரராஜன். இவர் பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலராகவும் உள்ளார். இவரது மருத்துவமனை சார்பில், தனது சொந்த ஊரான அருகில் உள்ள குளமங்களத்தில் வடக்கு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் 17 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஹரிஷ் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முகாமை டாக்டர் டி.நவரத்தினசாமி தொடங்கி வைத்தார். டாக்டர் சி.சீனிவாசன், தியாகராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் பொன்னிஷா திருவள்ளுவர், ரஞ்சித், இந்திராணி, சேது, வெங்கடேஷ், நிஷானி, ரிஷ்பனா பேகம், அம்சானி மற்றும் கண் மருத்துவ நுட்பனர்கள் திரவியம், பால்ராஜ், மருந்தாளுநர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு, நோயாளிகளை பரிசோதித்து இலவச மருந்து மாத்திரைகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆர்டிஓ திருவள்ளுவர், ஆசிரியர் செல்வம், சாந்தி ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.