தஞ்சாவூர், மார்ச் 24- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுடன் உதவிக்கு ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார் மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ். வைரஸ் தொற்றுகளை கட்டுப் படுத்தும் விதமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நான்கு வழி களில், இரண்டு வழிகள் மூடப்பட்டு, ஒரு வழியில் பொதுமக்களும், மற்றொரு வழியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணி யாளர்களும் செல்வதற்கு அனுமதிக்கப் படுவர். மார்ச் 31-ம் தேதி வரை தேவையான அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படும் மற்ற அறுவை சிகிச்சைகள் பின்னர் நடைபெறும். மேலும், உள் நோயா ளிகளுடன் உதவியாளராக ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள், பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட அனைத்து வாக னங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்களின் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கைகளை சுத்தமாக சோப்பிட்டு கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் இதுவரை கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டு, எவரும் அனு மதிக்கப்படவில்லை. காய்ச்சல், இருமல், சளி உள்ளோருக்கும், சந்தேகத்திற்குரிய காய்ச்சலுடன் வெளிநாடுகள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா சிகிச்சை சிறப்புப் பிரிவில் 10 பேர் கண்காணிக்கப்பட்டு வந்த தில், 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு கள் வரவில்லை. எனவே, அவர்கள் தொ டர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 105 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை கட்டடம் தயார் நிலையில் உள்ளது. இங்கு, பணியாற்றும் அனைத்து மருத்து வர்கள், பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க முகக் கவசம், கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.